மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்தார் இலங்கை அதிபர்!
இந்தியாவிற்கு வருகை தந்துள்ள இலங்கை அதிபர் அனுர குமார திஷநாயகே வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து இருநாட்டு நட்புறவு குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
3 நாள் அரசுமுறை பயணமாக இலங்கை அதிபர் அனுர குமார திஷநாயகே முதல் முறையாக இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார். டெல்லி விமான நிலையம் வந்தடைந்த அவரை மத்திய அமைச்சர் எல்.முருகன் வரவேற்றார்.
தொடர்ந்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோரை சந்தித்து இருநாட்டு நட்புறவு குறித்து ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அனுர குமார திஷநாயகே இலங்கை அதிபராக பதவியேற்றதை தொடர்ந்து, முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியாவிற்கு வருகை தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து டெல்லியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை, இலங்கை அதிபர் அனுர குமார திஷநாயகே சந்தித்தார். தொடர்ந்து இருவரும் இருநாட்டு நட்புறவு குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். இந்நிலையில் இலங்கை அதிபர் அனுர குமார திஷநாயகே, பிரதமர் மோடியை இன்று சந்தித்து பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.