மத ரீதியாக துன்புறுத்தப்பட்டோருக்கு இந்தியா ஆதரவுக் கரம் நீட்டுகிறது! : ஆளுநர் ஆர்.என்.ரவி
11:14 AM Dec 17, 2024 IST | Murugesan M
பிற நாடுகளில் மத ரீதியாக துன்புறுத்தப்பட்டோருக்கு இந்தியா ஆதரவுக்கரம் நீட்டுவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.
பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்தியா வென்று வங்கதேசம் உருவானதை நினைவுகூரும் வகையில், வெற்றி தின விழா சென்னையில் கொண்டாடப்பட்டது. தரமணியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, இயற்கை பேரிடர் உள்பட அனைத்து சூழலையும் எதிர்கொள்ள, இந்திய ராணுவம் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
Advertisement
மேலும், பல்வேறு மதத்தினரும் இந்தியாவில் மட்டும்தான் இணக்கமாக வாழ முடியும் என்று கூறிய அவர், எவரையும் பிரித்து பார்க்கும் நோக்கம் இந்திய மக்களிடம் இல்லை எனவும் தெரிவித்தார்.
Advertisement
Advertisement