மந்த கதியில் நடைபெறும் ரயில்வே மேம்பால பணிகள் - கடும் போக்குவரத்து நெரிசல்!
சென்னை அடுத்துள்ள பெருங்களத்தூர் அருகே ரயில்வே மேம்பாலம் விரிவாக்க பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு தாம்பரம் வழியாக செல்லும் சாலையில் பெருங்களத்தூர் அருகே மேம்பாலத்தின் விரிவாக்க பணிகள் கடந்த பத்து மாதத்திற்கு மேலாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இன்று தாம்பரம் - பெருங்களத்தூர் செல்லும் சாலையில் சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், தாம்பரம் - பெருங்களத்தூர் செல்லும் சாலையில் சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதேபோல, வண்டலூரில் இருந்து வரும் வாகனங்களும் போக்குவரத்து நெரிசலில் சிக்கியது. எனவே, மேம்பாலத்தை விரைந்து திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.