செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

மாநில அரசுகளுக்கு ரூ.1,73,000 கோடி வரிப்பகிர்வு - மத்திய அரசு விடுவிப்பு!

10:03 AM Jan 11, 2025 IST | Murugesan M

மாநில அரசுகளுக்கு ஒட்டுமொத்தமாக ஒரு லட்சத்து 73 ஆயிரம் கோடி ரூபாய் வரிப் பகிர்வை மத்திய அரசு விடுவித்துள்ளது.

Advertisement

மாநில அரசுகளின் மூலதன செலவினங்களை விரைவுப்படுத்தவும், அரசு திட்டங்களுக்கு தேவையான நிதி தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலும், மத்திய அரசு சார்பில் வரிப்பகிர்வு என்பது வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, மாநில அரசுகளுக்கு ஒட்டுமொத்தமாக ஒரு லட்சத்து 73 ஆயிரம் கோடி ரூபாய் வரிப்பகிர்வை மத்திய அரசு விடுவித்துள்ளது.

Advertisement

தமிழகத்துக்கு வழங்க வேண்டிய 7 ஆயிரத்து 57 கோடி ரூபாயும் மத்திய அரசு விடுவித்துள்ளது. அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்துக்கு 31 ஆயிரத்து 39 கோடியே 84 லட்சம் ரூபாயும், பீகாருக்கு 17 ஆயிரத்து 403 கோடி ரூபாயும்,

மத்தியப்பிரதேசத்துக்கும், மேற்குவங்கத்துக்கும் தலா 13 ஆயிரம் கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆந்திர மாநிலத்துக்கு ஏழாயிரம் கோடி ரூபாயும், கர்நாடகாவுக்கு 6 ஆயிரத்து 310 கோடி ரூபாயும் மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

Advertisement
Tags :
capital expenditurecentral governmentgovernment projects.MAINstate governmentstax sharing
Advertisement
Next Article