மாநில அரசுகளுடன் இணைந்து நாடு முழுவதும் 50 சுற்றுலா தலங்கள் மேம்படுத்தப்படும் : நிர்மலா சீதாராமன்
மாநில அரசுகளுடன் இணைந்து நாடு முழுவதும் 50 சுற்றுலா தலங்கள் மேம்படுத்தப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
Advertisement
பட்ஜெட் தாக்கல் செய்யும்போது சுற்றுலாத்துறை சார்ந்த அறிவிப்புகளை வெளியிட்ட நிதியமைச்சர், சுற்றுலா தலங்களில் உள்ள விடுதிகளுக்கு முத்ரா கடன் திட்டம் விரிவுபடுத்தப்படும் என தெரிவித்தார்.
HEAL IN INDIA திட்டத்தின் கீழ் மருத்துவ சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு தனியார் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படும் எனக்கூறிய நிதியமைச்சர், மாநில அரசுகளுடன் இணைந்து நாடு முழுவதும் 50 சுற்றுலா தலங்கள் மேம்படுத்தப்படும் என அறிவித்தார்.
வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் தேர்ந்தெடுக்கப்பட்ட வெளிநாட்டு சுற்றுலா குழுக்களுக்கு விசா தள்ளுபடிகள் அறிமுகப்படுத்தப்படும் எனக்கூறிய நிதியமைச்சர், ஆன்மிக மற்றும் பாரம்பரிய சுற்றுலா தலங்களை மேம்படுத்துவதில் முக்கியத்துவம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.