For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

மாமன்னன் இராஜராஜ சோழன் சதய விழா - பன்னிரு திருமுறை ஊர்வலம் கோலாகலம்!

10:56 AM Nov 10, 2024 IST | Murugesan M
மாமன்னன் இராஜராஜ சோழன் சதய விழா   பன்னிரு திருமுறை ஊர்வலம் கோலாகலம்

மாமன்னன் இராஜராஜ சோழனின் 1,039 சதய விழாவின் இரண்டாம் நாளான இன்று பன்னிரு திருமுறைகளை யானை மீது வைத்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.

தஞ்சை பெரியகோயிலை கட்டிய மாமன்னன் இராஜராஜ சோழனின் 1,039 சதய விழா கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நாளில் கவியரங்கம், பட்டிமன்றம், கருத்தரங்கம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Advertisement

இரண்டாம் நாளான இன்று கோவில் நிர்வாகம் சார்பாக ஓதுவார்களுக்கு புத்தாடை வழங்கி மரியாதை செலுத்தப்பட்டது.

தொடர்ந்து பன்னிரு திருமுறைகளை யானை மீது வைத்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. இதையடுத்து, அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம், தருமபுரம் ஆதீனம் உள்ளிட்டோர் சோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Advertisement

Advertisement
Tags :
Advertisement