For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

மார்கழி அஷ்டமி சப்பர வீதி உலா : ஜீவராசிகளுக்கு படியளக்கும் நிகழ்ச்சி!

04:28 PM Dec 23, 2024 IST | Murugesan M
மார்கழி அஷ்டமி சப்பர வீதி உலா   ஜீவராசிகளுக்கு படியளக்கும் நிகழ்ச்சி

சிவகங்கை ஆனந்தவல்லி சோமநாதர் கோயிலில் மார்கழி அஷ்டமி சப்பர வீதி உலாவில் ஜீவராசிகளுக்கு படியளக்கும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சப்பரம் இழுத்தனர்.

சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தான நிர்வாகத்திற்கு உட்பட்ட மானாமதுரை ஆனந்தவல்லி-சோமநாதர் கோயிலில் மார்கழி அஷ்டமியை முன்னிட்டு காலை 9 மணிக்கு சுவாமிகள் ரிஷப வாகனத்தில் சப்பரங்களுக்கு எழுந்தருளினர்.

Advertisement

பின்னர் சப்பரங்கள் பாகவத் அக்ரஹாரம் வழியாக 4 ரத வீதிகளின் வழியே வலம் வந்து கோயிலை வந்தடைந்தது. ஏராளமான பக்தர்கள் சப்பரத்திற்கு நெல் நவ தானியங்கள் உள்ளிட்டவற்றை தூவியபடி சென்றனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் சிவாச்சாரியார்கள் செய்திருந்தனர்.

Advertisement
Advertisement
Tags :
Advertisement