மார்கழி மாதம் அதிகாலையில் எழுந்து ஏன் கோலம் போட வேண்டும்?
மார்கழி மாதத்தில் அதிகாலையில் எழுந்து பெண்கள் கோலமிடுவது பாரம்பரியமாக பார்க்கப்படுகிறது... அதுப்பற்றிய ஒரு சிறப்பு தொகுப்பை தற்போது பார்க்கலாம்..!
Advertisement
மார்கழி என்றாலே எல்லா கடவுள்களுக்கும் உகந்த மாதமாகும்...இதை தணுர் மாதம் என்றும் அழைப்பார்கள்... குறிப்பாக மார்கழியின் முக்கிய அம்சமாக பார்க்கப்படும் கோலங்களுக்கு பின்னால் ஆன்மீகம் , அறிவியல் என நிறைய காரணங்கள் உள்ளன.
மார்கழி மாதம் என்பது தேவர்களுக்கு பிரம்மா முகுர்த்த நேரம்... அதிகாலை நான்கு முதல் ஆறு மணிக்குள் எழுந்து , வீட்டு வாசலில் கோலமிட்டு இறைவனை வணங்கினால் தேவர்கள் மனம் மகிழ்ந்து நம்முடைய துன்பங்களை நீக்கி இன்பம் தருவார்கள் என்பது நம்பிக்கை.
சிவப்பு, மஞ்சள், பச்சை, ஊதா என வாசலில் போடப்படும் கோலங்களுக்கு அழகு சேர்ப்பது என்னவோ இந்த கலர் கோலபொடிகள்தான். புள்ளி வைத்து போடும் கம்பி கோலங்கள் மீதான ஆர்வம் குறைந்து மக்கள் ரங்கோலி கோலத்திற்கு மாறியபோதுதான் மார்கெட்டில் கலர் கோலப்பொடியின் மவுசும் அதிகரித்துள்ளது.
மார்கழி மாதத்தில்தான் பூமி ஓசோன் படலத்திற்கு அருகில் வரும்... அப்போது பூமியில் தூய்மையான ஆக்சிஜன் அதிக அளவில் இருக்கும்... அதிகாலையில் கிடைக்கக்கூடிய தூய்மையான ஆக்சிஜனை சுவாசிக்கும்போது சோம்பல் நீங்கி உடல் உற்சாகமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
மார்கழி கோலங்களில் வைக்கப்படும் பூசணி பூவுக்கு தனி சிறப்பு உண்டு... மேட்டரி மோனி போன்ற எந்த வசதிகளும் இல்லாத அந்த காலத்தில் தங்களுடைய வீட்டில் திருமண வயதில் ஆணோ அல்லது பெண்ணோ இருந்தால் அந்த வீட்டை சேர்ந்தவர்கள் வாசலில் பூசணி பூ வைப்பார்கள்.
அப்படி வைக்கும்போது அந்தத் தெருவின் வழியாக செல்பவர்கள், கோலத்தின் நடுவில் பூசணிப் பூ வைத்திருக்கும் வீடுகளை கவனத்தில் எடுத்துக்கொண்டு, தங்கள் சொந்தத்திலோ அல்லது தங்களுக்குத் தெரிந்தவர்கள் வீட்டிலோ திருமணத்திற்கு பேசி முடிப்பார்கள்.
குறிப்பாக பெண்கள் குனிந்து நிமிர்ந்து கோலமிடும்போது யோகா பயற்சி செய்த பலன்கள் கிடைக்கும்... அதுவும் புள்ளி வைத்து கம்பி கோலம் போடுவது பெண்களின் நினைவாற்றலை அதிகரிக்க உதவுகிறது... அதுமட்டுமில்லாமல் அரிசி மாவில் போடும் கோலத்தை எறுப்பு , பறவை போன்ற உயிரினங்கள் உணவாக சாப்பிடுவதால் அரிசி மாவில் கோலம் போடுவதையும் பெண்கள் மகத்துவமாக பார்க்கின்றனர்.
வீட்டிற்கு அழகும் சேர்ப்பது மட்டுமில்லாமல் அறிவியல் ரீதியில் நிறைய நன்மைகளை உள்ளடக்கியதாக திகழ்கிறது இந்த மார்கழி வண்ண கோலங்கள்.