மார்கழி மாத அஷ்டமி பிரதட்சணத்தையொட்டி சிறப்பு பூஜைகள்!
04:42 PM Dec 23, 2024 IST | Murugesan M
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் மார்கழி மாத அஷ்டமி பிரதட்சணத்தையொட்டி சுவாமி அம்பாள் பக்தர்களுக்கு படியளக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மார்கழி மாத அஷ்டமி பிரதட்சணம் அன்று தமிழக கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் ராமநாதசாமி கோயிலில் அதிகாலை 3 மணியளவில் நடை திறக்கப்பட்டு ஸ்படிக லிங்க பூஜை நடைபெற்றது.
Advertisement
பின்னர் சுவாமி அம்பாள் படியளப்பதற்காக எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. நடுத்தெரு, திட்டக்குடி உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்த சுவாமி- அம்பாள் பக்தர்களுக்கு படியளந்தார்.
நிகழ்வையொட்டி கோயிலுக்கு வருகைதந்த ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
Advertisement
Advertisement