For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

மினி பேருந்து ஓட்டுநர் வெட்டிக்கொலை! : சிறுவன் உள்பட 4 பேர் கைது!

01:30 PM Dec 09, 2024 IST | Murugesan M
மினி பேருந்து ஓட்டுநர் வெட்டிக்கொலை    சிறுவன் உள்பட 4 பேர் கைது

தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டையில் மினி பேருந்து ஓட்டுநர் கொலை வழக்கில் சிறுவன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

பசுபதிகோவில் தெருவை சேர்ந்த சிவா, மினி பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இவரை கும்பல் ஒன்று வெட்டி படுகொலை செய்தது. இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

Advertisement

இந்த நிலையில், அய்யம்பேட்டை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் சுற்றித்திரிந்த 17 வயது சிறுவன் உள்பட 4 பேரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, அவர்கள் சிவாவை கொலை செய்தவர்களின் நண்பர்கள் என்பதும், கொலை செய்ய இருசக்கர வாகனத்தை கொடுத்து உதவியதும் தெரியவந்தது. இதனையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மேலும் 3 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement

Advertisement
Tags :
Advertisement