For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

மீண்டும் அசத்திய இஸ்ரோ! : விண்வெளியில் செயற்கைக்கோள் இணைப்பில் சாதனை முயற்சி!

09:05 PM Dec 31, 2024 IST | Murugesan M
மீண்டும் அசத்திய இஸ்ரோ    விண்வெளியில் செயற்கைக்கோள் இணைப்பில் சாதனை முயற்சி

இஸ்ரோவின் ( SpaDeX MISSION ) ஸ்பேடெக்ஸ் மிஷன், Space Docking Experiment என்னும் விண்வெளியில் இணைக்கும் திறன்களை நிரூபிக்க உள்ளது. இது இந்தியாவின் விண்ணில், செயற்கை கோள்களை இணைக்கும் தொழில்நுட்பமாகும். எதிர்கால விண்வெளிப் பயணங்களுக்கான இன்றியமையாத தொழில்நுட்ப வெற்றியான SpaDeX இஸ்ரோவின் இன்னொரு சாதனையாகும். SpaDeX என்றால் என்ன ? Space Docking Experiment என்றால் என்ன? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

2035ம் ஆண்டு விண்வெளியில் தனது சொந்த விண்வெளி ஆய்வு மையம் அமைக்க இந்திய திட்டமிட்டுள்ளது. அதற்கு "Bharatiya Antriksh Station"-"பாரதிய அன்ட்ரிக்ஷ் நிலையம்" என்று பெயரிடப்பட்டுள்ளது. அதற்கு முன், SpaDex என்ற திட்டத்தை இஸ்ரோ செயல்படுத்தியுள்ளது.

Advertisement

விண்வெளிக்குச் செல்லும் விண்வெளி வீரர்கள், தாங்கள் பயணிக்கும் செயற்கை கோளை ஒவ்வொரு முறையும், சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைக்க வேண்டும். இரண்டும் பாதுகாப்பாக ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட பின்னரே, விண்வெளி வீரர்கள் விண்வெளி நிலையத்தின் பிரத்யேக ஆய்வகத்துக்குள் செல்ல முடியும்.

இப்படி செயற்கை கோளை விண்வெளி நிலையத்துடன் இணைப்பதே Space Docking எனப்படுகிறது. இந்த Space Docking மிகவும் கடினமான மற்றும் சிக்கலான நடைமுறைகளில் ஒன்றாகும். சிறிய தவறு ஏற்பட்டால் கூட பேரழிவிற்கு வழிவகுத்துவிடும் அபாயம் உண்டு.

Advertisement

அண்மையில் சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்ற ஸ்டார் லைனரில் Docking செயல் முறையில் ஏற்பட்ட பிரச்சனையால் தான், அதில் சென்ற சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட அமெரிக்க விண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்ப முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உலகில் இதுவரை அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய மூன்று நாடுகள் மட்டுமே இரண்டு செயற்கைக்கோள்களை விண்வெளியில் இணைக்கும் திறனைப் பெற்றுள்ளன. இந்நிலையில், சிக்கலான இந்த பணியை தான் இஸ்ரோவின் SpaDex விண்ணில் மேற்கொள்ள உள்ளது.

சுதந்திரமாக சுற்றும் இரண்டு தனித்தனி செயற்கை கோள்களை இணைக்கும் (Space Docking Experiment - SpaDex) பணியை விண்ணில் செய்வதைக் குறிப்பிடும் Space Docking என்பதன் சுருக்கமே ஸ்பேஸ்டெக்ஸ் ஆகும். SPADEX, நடப்பாண்டில், இஸ்ரோவின் கடைசி வெற்றி திட்டமாகும்.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து PSLV-C60 ஏவுகலன் மூலம் இரண்டு செயற்கை கோள்கள் ஒன்றாக விண்ணில் செலுத்தப்பட்டது.

SPADEX- ல் CHASER-SDX01 மற்றும் TARGET- SDX02 எனும் இரண்டு செயற்கை கோள்கள் உள்ளன. ஒவ்வொன்றும் 220 கிலோகிராம் எடை கொண்டவையாகும். இரண்டும் அதிவேகமாக பூமியைச் சுற்றி வரும் அதே வேளையில், CHASER, TARGETயைத் துரத்தி விரைவாக அதனுடன் இணைய வேண்டும் என்பதே நோக்கமாகும்.

விண்வெளியின் வெற்றிடத்தில், இரண்டு செயற்கைக்கோள்களை மணிக்கு 28,800 கிலோமீட்டர் வேகத்தில் இணைக்க முயற்சிக்கும் என்று கூறப்படுகிறது. அவற்றின் ஒப்பீட்டு வேகத்தை மணிக்கு வெறும் 0.036 கிலோமீட்டர் என்று குறைக்க வேண்டும். பின்னர் இரண்டு செயற்கைக்கோள்களும் ஒன்றிணைந்து விண்வெளியில் ஒரே அலகை அடைய வைக்க வேண்டும். இஸ்ரோவுக்கு இது ஒரு சவாலான பணியாகும்.

விண்வெளியில் இருக்கும்போது இரண்டு விண்கலன்களை இணைப்பது மட்டும் இல்லாமல், இணைக்கப்பட்ட இரண்டு விண்கலன்களுக்கு இடையே தகவல் பரிமாற்றம் உள்ளிட்டவை குறித்தும் பரிசோதனையை இஸ்ரோ மேற்கொள்ள உள்ளது.

இரண்டு செயற்கை கோள்களும், பூமியின் மேற்பரப்பில் இருந்து சுமார் 470 கிலோமீட்டர் உயரத்தில், குறைந்த சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளன. பூமியை நோக்கி 55 டிகிரி சாய்வாக இந்த இரண்டும் இருக்கும். தொடர்ந்து, 24 மணி நேரம் கழித்து பெங்களூரில் உள்ள இஸ்ரோவின் தரைக்கட்டுப்பாட்டு மையத்தில் உள்ள விஞ்ஞானிகள் இந்த SPACE DOCKING பணியைச் செய்வார்கள்.

நறுக்குதல் தொழில்நுட்பத் திறன், இந்தியாவின் எதிர்கால விண்வெளி லட்சியங்களுக்கு மிகவும் இன்றியமையாத பணியாகும். "சந்திராயன்-4" மற்றும் இந்தியாவின் பிற விண்வெளி திட்டப் பணிகளுக்கு நறுக்குதல் தொழில்நுட்பம் முக்கியமானதாகும் என்று கூறப்படுகிறது.

இஸ்ரோ வெற்றிகரமாக இதை செய்து முடித்தால், விண்வெளி தொழில்நுட்பத்தில் இந்தியாவின் பெருஞ் சாதனையாக அமையும்.

மிக குறைந்த செலவில், மிகவும் மேம்பட்ட விண்வெளி திறன்களை வளர்ப்பதில் இஸ்ரோவின் அர்ப்பணிப்பைப் பாராட்டாமல் இருக்க முடியாது.

Advertisement
Tags :
Advertisement