மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆர் நினைவு தினம் - நினைவிடத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை!
மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆரின் நினைவிடத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அதிமுகவின் நிறுவனரும், மறைந்த முதலமைச்சருமான எம்ஜிஆரின் 37-வது நினைவு நாளையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில், அதிமுக சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. எம்ஜிஆர் நினைவிடத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இதனை தொடர்ந்து அதிமுக மூத்த நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர். இதனை தொடர்ந்து அதிமுக சார்பில் உறுதிமொழி எடுக்கப்பட்டது.
சென்னை மெரினாவில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தமது ஆதாரவாளர்களுடன் மரியாதை செலுத்தினார். இதனை அடுத்து மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்திலும் அவர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
சென்னையில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில் வி.கே.சசிகலா தமது ஆதரவாளர்களுடன் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து உறுதிமொழியையும் அவர் ஏற்றுக்கொண்டார்.
இதனிடையே எம்ஜிஆர் நினைவிடத்தில் அமமுக பொதுசெயலாளர் டிடிவி தினகரன் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அமமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு மரியாதை செலுத்தினர்.