செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

முல்லைப்பெரியாறு அணை தொடர்பான வழக்கு விசாரணை!

01:59 PM Jan 20, 2025 IST | Murugesan M

முல்லைப்பெரியாறு அணை தொடர்பாக ஏற்கனவே அமைத்த கண்காணிப்பு குழு தொடர வேண்டுமா என்பது குறித்து தமிழகம் மற்றும் கேரள அரசுகள் கருத்து தெரிவிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில், அணையில் மராமத்து பணியை மேற்கொள்ள கேரள அரசு முட்டுக்கட்டையாக உள்ளது என வாதிடப்பட்டது.

மேலும், அணை பாதுகாப்பாக உள்ளதா என்பது குறித்த ஆய்வு செய்ய கேரள அரசு அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. கேரள அரசு தரப்பில், அணை பாதுகாப்பு தொடர்பாக 5 ஆண்டுகளாக ஒருமுறை நிபுணர்கள் ஆய்வு செய்ய வேண்டும் என்றும், அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தியதே தங்களுக்கு சவாலாக உள்ளது எனவும் கூறப்பட்டது.

Advertisement

இருதரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள், 142 அடியாக உயர்த்தப்பட்ட விவகாரம் ஏற்கனவே முடித்து வைக்கப்பட்ட விவகாரம் என தெரிவித்தனர்.

அணை விவகாரத்தில் இருதரப்பும் தொடர்ந்து பரஸ்பரம் குற்றம்சாட்டி வந்தால் எந்த தீர்வும் கிடைக்காது எனக்கூறிய நீதிபதிகள், அணையை பலப்படுத்தும் விவகாரம் குறித்த வழக்கை மட்டும் விசாரிக்கலாம் என கூறினர்.

மேலும், முல்லைப்பெரியாறு அணை தொடர்பாக ஏற்கனவே அமைத்த கண்காணிப்பு குழு தொடர வேண்டுமா அல்லது 2021 அணை பாதுகாப்பு சட்டப்படி அமைத்த குழு வேண்டுமா என்பதை இருதரப்பும் கருத்து தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை பிப்ரவரி 3ஆம் வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

Advertisement
Tags :
Case investigation related to Mullaperiyar DamMAINMullaperiyar Damsupreme courtsupreme court of india
Advertisement
Next Article