முழு கொள்ளளவை எட்டியது மேட்டூர் அணை!
12:00 PM Dec 31, 2024 IST | Murugesan M
சேலம் மாவட்டம் மேட்டூர் அணை, நடப்பாண்டில் 3-வது முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
கடந்த ஜூலை மாதம் 3ஆம் தேதி மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. இதையடுத்து கனமழை காரணமாக ஆகஸ்ட் மாதம் 12-ஆம் தேதி மீண்டும் அணை முழு கொள்ளளவை எட்டியது.
Advertisement
அதன்பின்னர் டெல்டா பாசனத்திற்காக அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டதால், நீர்மட்டம் சரியத் தொடங்கியது. இதற்கிடையே, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக அணையின் நீர்மட்டம் மீண்டும் உயரத் தொடங்கியது. இந்த நிலையில், மேட்டூர் அணை 3-வது முறையாக முழு கொள்ளளவை எட்டியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Advertisement
Advertisement