3-வது முறையாக முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை!
மேட்டூர் அணை 27 ஆண்டுக்குப் பின்னர் டிசம்பர் மாதத்தில் மூன்றாவது முறையாக தனது முழு கொள்ளளவை எட்டி சாதனை படைத்துள்ளது.
மேட்டூர் அணை நேற்று இரவு பத்து மணி அளவில் முழு கொள்ளவை எட்டியது. அணையின் வரலாற்றில் டிசம்பர் மாதம் முழு கொள்ளவை 3-வது முறையாக எட்டியுள்ளது இதுவே முதல் முறையாகும்.
அணையில் நீர் இருப்பு 93 புள்ளி 47 டிஎம்சியாக உள்ளது. அணையிருந்து வினாடிக்கு 500 கன அடியாக இருந்த நீர் திறப்பு, நள்ளிரவு முதல் ஆயிரம் கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
அணையில் நீர் மட்டம், கடந்த ஜூலை 30-ம் தேதி 120 அடியை எட்டிய நிலையில், ஆகஸ்ட் 12-ம் தேதி மீண்டும் முழு கொள்ளவை எட்டியது. இந்நிலையில், டிசம்பர் மாதத்தில் மூன்றாவது முறையாக தனது முழு கொள்ளளவை எட்டி சாதனை படைத்துள்ளது.
இது 27 ஆண்டுகளுக்குப் பின்பு நிகழ்ந்த சாதனையாக பார்க்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால், விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் கிடைக்கும் என்பதாலும், நிலத்தடி நீர் மட்டம் உயரும் என்பதாலும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.