For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

மூன்று காலிஸ்தான் பயங்கரவாதிகள் என்கவுன்டர்! - அதிரடி காட்டிய போலீஸ்

12:01 PM Dec 23, 2024 IST | Murugesan M
மூன்று காலிஸ்தான் பயங்கரவாதிகள் என்கவுன்டர்    அதிரடி காட்டிய போலீஸ்

பஞ்சாப் காவல் நிலைகள் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்திய மூன்று காலிஸ்தான் பயங்கரவாதிகள் என்கவுன்டரில் கொல்லப்பட்டனர்

உத்தரபிரதேசத்தின் பிலிபித் என்ற இடத்தில் இன்று, பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரில் உள்ள காவல்நிலையத்தின் மீது கையெறி குண்டு வீசிய மூன்று காலிஸ்தான் பயங்கரவாதிகளை, காவல்துறை என்கவுண்டரில் சுட்டு கொன்றனர்.

Advertisement

இது குறித்து பிலிபித் காவல்துறை கண்காணிப்பாளர் (SP) அவினாஷ் பாண்டே கூறுகையில், புரான்பூர் காவல் நிலையப் பகுதியில் காலிஸ்தானி பயங்கரவாதிகள் எனச் சந்தேகிக்கப்படும் பயங்கரவாதிகளுக்கும், பஞ்சாப் மற்றும் உத்தரப் பிரதேச காவல்துறையின் கூட்டுக் குழுவிற்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது.

காயமடைந்த பயங்கரவாதிகள் குர்விந்தர் சிங், வீரேந்திர சிங் மற்றும் ஜசன்பிரீத் சிங் ஆகியோர் காயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். எனினும்,  சிகிச்சை பலனின்றி அவர்கள் உயிரிழந்தனர்.

Advertisement

சம்பவ இடத்தில் இருந்து இரண்டு ஏகே ரக துப்பாக்கிகள், இரண்டு க்ளோக் பிஸ்டல்கள் மற்றும் ஏராளமான வெடிமருந்துகளை அதிகாரிகள் மீட்டனர் எனத் தெரிவித்தார்.

Advertisement
Tags :
Advertisement