பிரயாக்ராஜில் அமைச்சரவை கூட்டம் - திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய உ.பி. முதல்வர்!
மூன்று மருத்துவக் கல்லூரிகள், 62 ஐடிஐக்கள் மற்றும் பிற வளர்ச்சித் திட்டங்களை உத்தரப் பிரதேச முதல்வர் யோகி அமைச்சரவை கூட்டத்தில் அறிவித்தார்.
உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரயாக்ராஜில் உள்ள மகா கும்பத்தில் அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தினார். இந்த கூட்டத்தில் மாநிலத்திற்கான குறிப்பிடத்தக்க திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
ஹத்ராஸ், கஸ்கஞ்ச் மற்றும் பாக்பத் ஆகிய இடங்களில் மூன்று புதிய மருத்துவக் கல்லூரிகளை நிறுவுவதாக முதல்வர் யோகி அறிவித்துள்ளார்.
இக்கூட்டத்தில் பேசிய அவர், கூடுதலாக, 62 தொழில்துறை பயிற்சி நிறுவனங்கள் (ITIs) மற்றும் புதுமை, கண்டுபிடிப்பு மற்றும் பயிற்சிக்கான ஐந்து மையங்கள் மாநிலம் முழுவதும் அமைக்கப்படும் என தெரிவித்தார்.
ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்த உத்தரபிரதேச விண்வெளி மற்றும் பாதுகாப்பு வேலைவாய்ப்பு கொள்கையை புதுப்பிக்கவும் அமைச்சரவை முடிவு செய்தது என்றும் மாநிலத்தில் அதிக முதலீட்டை ஈர்க்க புதிய சலுகைகள் அறிமுகப்படுத்தப்படும் என்று உ.பி முதல்வர் கூறினார்.
பிரதமரின் தொலைநோக்குப் பார்வையால் ஈர்க்கப்பட்டு, பிரயாக்ராஜ் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை நிலையான வளர்ச்சித் திட்டங்களுடன் இணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
கூட்டத்திற்குப் பிறகு, முதல்வர் யோகி, தனது முழு அமைச்சரவையுடன் சேர்ந்து, திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார். இதில் துணை முதல்வர்கள் கேசவ் பிரசாத் மவுரியா மற்றும் பிரஜேஷ் பதக் 54 மாநில அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.