For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

மேட்டுப்பாளையம் - உதகை இடையிலான மலை ரயில் சேவை தொடக்கம்!

01:03 PM Dec 04, 2024 IST | Murugesan M
மேட்டுப்பாளையம்   உதகை இடையிலான மலை ரயில் சேவை தொடக்கம்

மேட்டுப்பாளையம் - உதகை இடையிலான மலை ரயில் சேவை 2 நாட்களுக்கு பின் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

உலக பிரசித்தி பெற்ற உதகை - மேட்டுப்பாளையம் மலை ரயிலில் நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் முன்பதிவு செய்து பயணித்து வருகின்றனர்.

Advertisement

இதனிடையே கடந்த சில தினங்களாக உதகையில் பெய்த கனமழை காரணமாக ரயில் தண்டவாளத்தில் ஆங்காங்கே மண்சரிவு ஏற்பட்டது.

இதனால் கடந்த 2 தினங்களாக மலை ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது தண்டவாளங்கள் சீர்செய்யப்பட்டதால் மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் முன்பதிவு செய்து மலை ரயிலில் பயணித்தனர்.

Advertisement

Advertisement
Tags :
Advertisement