மேட்டூர் அருகே தமிழக போலீசார் மீது தாக்குதல் நடத்திய வட மாநில இளைஞர்கள் சுற்றிவளைப்பு - காவல் நிலையத்தில் ஒப்படைத்த பொதுமக்கள்!
மேட்டூர் அருகே உள்ள சோதனை சாவடியில் பாதுகாப்பு பணியில் இருந்த 2 தமிழக காவலர்களை உத்தரப்பிரதேச இளைஞர்கள் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement
வடமாநில சுற்றுலா பேருந்து சேலம் மேட்டூர் அணையை அடுத்த கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள மாதேஸ்வர மலைக்கு சென்றுள்ளது. காரைக்காடு பகுதியில் உள்ள சோதனை சாவடியில் பணியில் இருந்த தமிழக காவலர்கள் சுற்றுலா பேருந்தை நிறுத்தி சோதனை செய்துள்ளார்.
அப்போது, பேருந்தில் மதுபோதையில் இருந்த வட மாநில இளைஞர்கள் காவலர்களை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனை அறிந்த அப்பகுதி மக்கள் பேருந்தை சுற்றிவளைத்து பிடித்து காவலர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனை தொடர்ந்து, காவலர்களை தாக்கிய இளைஞர்களை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இதனை அடுத்து, வடமாநில இளைஞர்கள் மற்றும் பேருந்தை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.