யாதவ்வின் ஜாமீன் மனு தள்ளுபடி! : சென்னை உயர்நீதிமன்றம்
நிதி நிறுவன மோசடி வழக்கில் தேவநாதன் யாதவ்வின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மயிலாப்பூர் HINDU PERMANENT FUND என்ற நிதி நிறுவனத்தை நடத்தி முதலீட்டாளர்களிடம் சுமார் 24 கோடி ரூபாய் மோசடி செய்ததாக அதன் இயக்குனர் தேவநாதன் யாதவ் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதை தொடர்ந்து தேவநாதன் யாதவ் தாக்கல் செய்த ஜாமின் மனுவை ஏற்கனவே 2 முறை பொருளாதார குற்றங்களை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து தனக்கு ஜாமின் வழங்கக்கோரி தேவநாதன் யாதவ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிபதி தனபால் முன் விசாரணைக்கு வந்த நிலையில், இந்த மோசடியால் பாதிக்கப்பட்டு 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் புகாரளித்துள்ளதால் ஜாமின் வழங்கக்கூடாது என அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
தொடர்ந்து இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தேவநாதன் யாதவ் மற்றும் நிதி நிறுவனத்தின் துணை இயக்குனர் குணசீலன் ஆகியோரின் ஜாமின் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.