செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

யாருக்கு என்ன பயன்? : உத்தரகாண்டில் அமலுக்கு வந்த பொது சிவில் சட்டம்!

01:41 PM Jan 29, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

நாட்டிலேயே முதன்முறையாக, பொது சிவில்சட்டத்தை உத்தரகாண்ட் மாநில அரசு அமல்படுத்தி உள்ளது. இதன் மூலம், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்திய முதல் மாநிலம் என்ற பெருமையை உத்தரகாண்ட் பெற்றுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

Advertisement

இந்தியாவில் குற்றவியல் சட்டங்களும், தண்டனைச் சட்டங்களும் அனைவருக்கும் பொதுவானவை. ஆனால் உரிமையியல் சட்டங்கள் எனப்படும் சிவில் சட்டங்கள் மட்டும் சாதி, மத, இன ரீதியாக கலாசாரத்திற்கேற்ப மாறுபடும். இந்தியாவில் உள்ள பல்வேுறு சமூகங்கள், தங்களின் மத நம்பிக்கைகளின் அடிப்படையில் திருமணம் , விவகாரத்து, வாரிசு மற்றும் தத்தெடுப்பு விஷயங்களில் வெவ்வேறு சட்டங்களை பின்பற்றி வருகின்றன.

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் நேருவால் கூட, பொது சிவில் சட்டத்தை கொண்டு வர முடியவில்லை.

Advertisement

பல சமரசங்களுக்குப் பிறகு இந்து வாரிசுமைச் சட்டம் 1956-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

1985ம் ஆண்டு, ஷா பானு வழக்கில், இஸ்லாமிய பெண்ணான பானு தனது முன்னாள் கணவரிடம் இருந்து ஜீவனாம்சம் பெறலாம் என்று உச்சநீதிமன்றம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கியது.

அந்த தீர்ப்பில் தான், ‘Uniform’ என்ற வார்த்தையை நீதிபதிகள் பயன்படுத்தியிருந்தனர். அதன் பின்னரே பொது சிவில் சட்டம் வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றது. பாரதிய ஜனதா கட்சி அதனை வலுவாக முன்னெடுத்து தனது தேர்தல் அறிக்கைகளில் உறுதி அளித்தது.

உத்தரகாண்ட் மாநில பாஜக அரசு, நாட்டிலேயே முதன்முறையாக பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தி வரலாற்றில் இடம் பிடித்துள்ளது.

பாஜக ஆளும் உத்தரகாண்ட் மாநில அரசு, பொது சிவில் சட்ட மசோதாவை உருவாக்க, 2022 ஆம் ஆண்டு, ஒரு வல்லுநர் குழுவை அமைத்தது. அந்தக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், கடந்த பிப்ரவரி 4 ஆம் தேதி, பொது சிவில் சட்ட மசோதா உத்தரகாண்ட் சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப் பட்டது.

தொடர்ந்து, கடந்த பிப்ரவரி 7ம் தேதி நாட்டிலேயே முதல்முறையாக, உத்தரகாண்ட் மாநில சட்டப்பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றப் பட்டது.

இந்த மசோதாவுக்கு, கடந்த ஆண்டு மார்ச் மாதம் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்ததையடுத்து, இது சட்டமாக மாறியது.

பொது சிவில் மசோதாவை அமல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை வழங்க முன்னாள் தலைமைச் செயலாளர் சத்ருகன் சிங் தலைமையில் ஒரு நிபுணர் குழு நியமிக்கப்பட்டது. தனது அறிக்கையை அந்த குழு கடந்த டிசம்பர் மாதம், மாநில அரசிடம் சமர்ப்பித்தது.

கடந்த வாரம், முதல்வர் தாமி தலைமையிலான அமைச்சரவை, பொது சிவில் சட்டத்தைச் செயல்படுத்துவதற்கான விதிகளை அனுமதித்தது.

இந்நிலையில், கடந்த 27ம் தேதி முதல் உத்தரகாண்டில் பொதுசிவில் சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

இதற்கான பிரத்யேக ( PORTAL ) வலைத்தளத்தைத் தொடங்கி வைத்த முதல்வர் புஷ்கர் சிங் தாமி, உத்தரகாண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

திருமணம், பராமரிப்பு, வாரிசுரிமை மற்றும் விவாகரத்து போன்ற விஷயங்களில் எந்தவித பாகுபாடுமின்றி அனைவருக்கும் சம உரிமையை இந்த பொது சிவில் சட்டம் வழங்குகிறது.

இந்த பொது சிவில் சட்டம் உத்தரகாண்டில் வசிப்பவர்களுக்கும், வெளியில் வசிக்கும் உத்தரகாண்ட் மக்களுக்கும் பொருந்தும். உத்தரகாண்ட் மக்கள்தொகையில் 2.9 சதவீதம் உள்ள பழங்குடியினருக்கு , இந்த சட்டத்தில் இருந்து விலக்க அளிக்கப்பட்டுள்ளது.

அனைத்து மதத்தினருக்கும் குறைந்தபட்ச திருமண வயது ஆண்களுக்கு 21 வயதாகவும், பெண்களுக்கு 18 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அத்தை, மாமன் முறை மகன் அல்லது மகளை திருமணம் செய்வதை இந்த சட்டம் தடை செய்கிறது.

முஸ்லிம் தனிநபர் சட்டத்தில் உள்ள திருமணம் மற்றும் விவாகரத்து தொடர்பான ' ஹலாலா ', இத்தாத் மற்றும் தலாக் போன்ற நடைமுறைகளை இந்த பொது சிவில் சட்டம் தடை செய்கிறது. பலதார மணம் மற்றும் இருதார மணமும் இந்த சட்டத்தில் தடை செய்யப்பட்டுள்ளது.

திருமணம் மற்றும் விவாகரத்தைப் பதிவு செய்வது கட்டாயமாக்கப் பட்டுள்ளது. தம்பதிகள் இந்த விவரங்களைப் பதிவு செய்யும் போது பெயர்கள், வயதுச் சான்று, மதம் மற்றும் ஆதார் எண் உள்ளிட்ட ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

அனைத்து LIVE-IN உறவுகளையும் பதிவு செய்வதை இந்த சட்டம் கட்டாயமாக்குகிறது. LIVE-IN லைவ்-இன் உறவுகளில் உள்ள 21 வயதுக்குள்ளவர்கள், தங்கள் பெற்றோரின் ஒப்புதலை வழங்க வேண்டியது அவசியம்.

LIVE-IN ((லைவ்-இன்)) உறவை பதிவு செய்யாதவர்களுக்கு, மூன்று மாத சிறைத்தண்டனை, 10,000 ரூபாய் அபராதம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தவறான தகவல்களை தருபவர்களுக்கு மூன்று மாத சிறைத்தண்டனை, 25,000 ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

சொத்து மற்றும் வாரிசுரிமை தொடர்பான விஷயங்களில் பெண்களுக்கு சம உரிமை கிடைப்பதை இந்த சட்டம் உறுதி செய்கிறது.

சட்டவிரோத குழந்தைகள், தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள், வாடகைத் தாய் மூலம் பிறந்த குழந்தைகள் இனப்பெருக்க தொழில்நுட்பத்தின் மூலம் பிறந்த குழந்தைகள் என எல்லா குழந்தைகளும் இந்த சட்டத்தின் முன் சமம் என்று கூறப்பட்டுள்ளது.

உத்தர காண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், இந்த சட்டம் சமூகத்தில் சீரான தன்மையைக் கொண்டு வரும் என்றும், அனைத்து குடிமக்களுக்கும் சம உரிமைகள் மற்றும் பொறுப்புகளை உறுதி செய்யும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடியின் வளர்ச்சியடைந்த மற்றும் ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்கும் சேவையில், உத்தரகாண்ட் அரசின் முக்கிய பங்களிப்பு இந்த பொது சிவில் சட்டம் சட்டமாகும்.

Advertisement
Tags :
FEATUREDIndiaMAINucc in uttarakhanducc in uttarakhand latest newsuniform civil codeuniform civil code explaineduniform civil code in hindiuniform civil code in indiauniform civil code in uttarakhanduniform civil code uttarakhandUttarakhanduttarakhand newsuttarakhand uccuttarakhand uniform civil codeWhat is the benefit to whom? : General Civil Act came into force in Uttarakhand!what is uniform civil code
Advertisement