யூடியுபர் சவுக்கு சங்கர் மேலும் ஒரு வழக்கில் கைது!
12:01 PM Dec 20, 2024 IST | Murugesan M
அவதூறு பரப்பியதாக தொடரப்பட்ட மேலும் ஒரு வழக்கில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சவுக்கு சங்கர் மீதான கஞ்சா வழக்கு மதுரை போதைப் பொருள் தடுப்பு பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. விசாரணைக்கு ஆஜராகாததால் அவருக்கு பிடிவாரண்ட் பிறக்கப்பட்டது.
Advertisement
இதனையடுத்து, சென்னையில் அவரை கைது செய்த தேனி போலீசார், சிறையில் அடைத்தனர். இதனிடையே, தூய்மை பணியாளர்கள் தொடர்பான தமிழக அரசின் திட்டம் குறித்து அவதூறாக பேசியதாக மேலும் ஒரு வழக்கில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Advertisement
Advertisement