ரயில்வே பாதுகாப்பில் மும்மடங்கு கவனம் - மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் உறுதி!
11:40 AM Dec 22, 2024 IST | Murugesan M
ரயில்வே பாதுகாப்பில் மும்மடங்கு கவனம் செலுத்தி வருவதாக மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
ரயில்வே துறையில் சிறப்பாக செயலாற்றும் ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் மத்திய அரசு சார்பில் விருது வழங்கப்பட்டு வருகிறது. டெல்லி பாரத் மண்டபத்தில் நடந்த 69-வது விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில், சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், விருது வழங்கி கௌரவித்தார்.
Advertisement
அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், பிரதமர் மோடி 3-வது முறையாக ஆட்சியமைத்துள்ள நிலையில், 3 மடங்கு அதிகமாக உழைக்க வேண்டும் என்ற உத்வேகத்தையும், வழிகாட்டுதலையும் வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.
அந்த வகையில், ரயில்வே பாதுகாப்பில் மும்மடங்கு கவனம் செலுத்தி வருவதாக கூறினார். அதேபோல ரயில்வே துறையின் தரத்தை உயர்த்த மும்மடங்கு உழைத்து வருவதாகவும் தெரிவித்தார்.
Advertisement
Advertisement