ராசிபுரம் அருகே தனியார் பேருந்து லாரி மோதல் - 3 பேர் பலி!
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே தனியார் பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட கோர விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்....20க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆத்தூரில் இருந்து ராசிபுரம் நோக்கி 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ,கோரையாறு பகுதியில் ,எதிரே வந்த லாரி மோதி கோர விபத்தில் சிக்கியது.இதில் லாரி ஓட்டுநரும் தனியார் பேருந்து ஓட்டுனரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் தனியார் பேருந்தில் பயணம் செய்த பெண் பயணி ஒருவரும் நிகழ்விடத்திலேயே பலியானார்.
மேலும் தனியார் பேருந்தில் பயணம் மேற்கொண்ட சுமார் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த 108 அவசர ஊர்த்திகள்,காயமடைந்தவர்களை மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தன.மேலும் விபத்தில் படுகாயமடைந்தவர்கள் சேலம் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.