For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

ராஜஸ்தான் சட்டப்பேரவை இடைத்தேர்தல் - 5 தொகுதிகளில் பாஜக வெற்றி!

08:05 PM Nov 23, 2024 IST | Murugesan M
ராஜஸ்தான் சட்டப்பேரவை இடைத்தேர்தல்   5 தொகுதிகளில் பாஜக வெற்றி

ராஜஸ்தானில் 7 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் 5 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தின் ஜுன்ஜுனு, ராம்கர், தவுசா, தியோலி - உன்னியாரா, கின்வ்ஸார், சலும்பர் மற்றும் சொரசி ஆகிய 7 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நவம்பர் 13-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.

Advertisement

இதில் 5 தொகுதிகளின் எம்.எல்.ஏ-க்கள் மக்களவை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டதாலும், ராம்கர் மற்றும் சலும்பர் தொகுதிகளின் எம்.எல்.ஏ-க்கள் காலமானதாலும் இந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்ந்தல் நடத்தப்பட்டது.

இந்நிலையில் இன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், 5 தொகுதிகளில் பாஜக அபார வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக ஜுன்ஜுனு, ராம்கர், தியோலி - உன்னியாரா, கின்வ்ஸார், சலும்பர் ஆகிய 5 தொகுதிகளிலும் பாஜக வெற்றியை பதிவு செய்துள்ளது

Advertisement

Advertisement
Tags :
Advertisement