For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

ராமநாதபுரத்தில் பெண் கூட்டு பாலியல் - 4 பேர் கைது!

10:30 AM Jan 01, 2025 IST | Murugesan M
ராமநாதபுரத்தில் பெண் கூட்டு பாலியல்   4 பேர் கைது

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், ராமநாதபுரத்தில் பெண் ஒருவரை 4 பேர் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் மஞ்சனமாரியம்மன் கோயில் பகுதியை சேர்ந்த 40 வயது பெண் ஒருவர், கடந்த 29 -ஆம் தேதி தனது உறவினர் வீட்டிற்கு ஆட்டோவில் சென்றுள்ளார்.

Advertisement

அச்சுந்தன்வயல் அடுத்துள்ள புத்தேந்தல் ரயில்வே தண்டவாளம் அருகே சென்றபோது, இயற்கை உபாதையை கழிக்க புத்தேந்தல் காட்டுபகுதிக்கு ஆட்டோவில் இருந்து இறங்கி சென்றுள்ளார்.

அப்போது, அங்கு மது போதையில் இருந்த 4 பேர் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இது தொடர்பாக அப்பெண் அளித்த புகாரின் பேரில், புத்தேந்தல் பகுதியைச் சேர்ந்த புவனேஷ், முருகன், செல்வகுமார் மற்றும் குட்டி ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement

Advertisement
Tags :
Advertisement