ராமநாதபுரம் அருகே ஓடையில் இருந்து வெளியேறும் காட்டாற்று வெள்ளம் - நீரில் மூழ்கிய 5000 ஏக்கர் பயிர்கள்!
10:58 AM Dec 15, 2024 IST | Murugesan M
ராமநாதபுரம் அருகே கஞ்சம்பட்டி ஓடையில் இருந்து வெளியேறும் காட்டாற்று வெள்ளத்தால், 5 ஆயிரம் ஏக்கர் விளைபயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.
கடந்த சில நாட்களாக, ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால், கடலாடி மற்றும் கமுதி பகுதிகளில் முறையாக கால்வாய்கள் தூர்வாரப்படாததால், 5 ஆயிரம் ஏக்கர் பரப்பரளவில் பயிரிடப்பட்டிருந்த மிளகாய், மல்லி உள்ளிட்ட பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.
Advertisement
சேதமடைந்த பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்கவேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Advertisement
Advertisement