For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

ராமேஸ்வரம் - தலைமன்னார் கப்பல் போக்குவரத்து - அதிகாரிகள் ஆய்வு!

02:30 PM Nov 28, 2024 IST | Murugesan M
ராமேஸ்வரம்   தலைமன்னார் கப்பல் போக்குவரத்து    அதிகாரிகள் ஆய்வு

ராமேஸ்வரம் முதல் இலங்கை தலைமன்னார் வரை பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்க அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

இலங்கையில் ராணுவம், விடுதலைப்புலிகள் இடையே போர் தீவிரமடைந்ததால் பாதுகாப்பு கருதி கப்பல் போக்குவரத்தை மத்திய அரசு நிறுத்தியது.

Advertisement

41 ஆண்டுகளாக கப்பல் போக்குவரத்து முடங்கிய நிலையில் மீண்டும் தொடங்க தமிழக அரசு முனைப்பு காட்டுகிறது. கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட உள்ளதால் அதற்கான இடத்தை ஆய்வு செய்ய தமிழ்நாடு கடல்சார் வாரிய துணைத் தலைவர் வள்ளலார் தலைமையில் அதிகாரிகள் ராமேஸ்வரம் சென்றனர்.

அப்போது பேசிய வள்ளலார், மத்திய அரசின் சுற்றுச்சூழல்துறை அனுமதி கிடைத்ததும் பயணிகள் கப்பல் நிறுத்துவதற்கான பாலம் கட்டும் பணி தொடங்கும் என கூறியுள்ளார்.

Advertisement

Advertisement
Tags :
Advertisement