ராமேஸ்வரம் மீனவர்களை கைது : இலங்கை கடற்படையினரை கண்டித்து விசைப்படகு மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!
02:46 PM Jan 31, 2025 IST
|
Murugesan M
ராமேஸ்வரத்தில், இலங்கை கடற்படையினரை கண்டித்து விசைப்படகு மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Advertisement
ராமேஸ்வரத்தில் இருந்து, அண்மையில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சிறையில் அடைத்த மீனவர்களை உடனே விடுதலை செய்ய வலியுறுத்தி, ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மீனவர்கள் தங்களது குடும்பத்தினருடன் பங்கேற்றனர்.
Advertisement
அப்போது, இலங்கை கடற்படை வசம் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை உடனே ஒப்படைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
Advertisement