ரூ.400 கோடிக்கு காலண்டர் வர்த்தகம் - சிவகாசி உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி!
08:30 PM Jan 02, 2025 IST | Murugesan M
சிவகாசியில் காலண்டர் வர்த்தகம் சுமார் 400 கோடி ரூபாய்க்கு நடைபெற்றுள்ளதால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் 800க்கும் மேற்பட்ட அச்சகங்கள் செயல்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் உற்பத்தியாகும் மொத்த காலண்டர்களில் சுமார் 90 சதவீதம் சிவகாசியில் அச்சிடப்படுகின்றன.
Advertisement
தீபாவளியை ஒட்டியே காலண்டர்களுக்கான ஆர்டர்கள் அதிகரிக்க தொடங்கியதை அடுத்து அச்சடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. இந்நிலையில், 2025ம் ஆண்டுக்கான காலண்டர் வர்த்தகம் சுமார் 400 கோடி ரூபாய்க்கு நடைபெற்றுள்ளதால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Advertisement
Advertisement