ரேஷன் கடை ஊழியரை திமுக பிரமுகர் தகாத வார்த்தையால் திட்டும் வீடியோ வைரல்!
11:00 AM Jan 15, 2025 IST | Murugesan M
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே ரேஷன் கடை ஊழியரை, திமுக பிரமுகர் ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டியது பொதுமக்கள் மத்தியில் முக சுழிப்பை ஏற்படுத்தியது.
சுமைதாங்கிபுதூர் பகுதியில் அரசு நியாய விலைக்கடையில் விற்பனையாளராக சின்னுசாமி என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், வெள்ளியம்பாளையம் பகுதியை சேர்ந்த திமுக பிரமுகர் துரைசாமி, ரேஷன் கடைக்கு வந்துள்ளார்.
Advertisement
அவரது கை ரேகை பதிவு ஆகாததால் பொங்கல் பொருட்கள் தரமுடியாது என கூறிய விற்பானையாளர் சின்னுசாமியை அவர் தகாத வார்த்தைகளால் வசைபாடி உள்ளார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Advertisement
Advertisement