For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

புகாரில் திருப்பம், குற்றப்பத்திரிகையில் அதானி பெயரே இல்லை : முன்னாள் அட்டர்னி ஜெனரல் விளக்கம் - சிறப்பு தொகுப்பு!

09:00 PM Nov 28, 2024 IST | Murugesan M
புகாரில் திருப்பம்  குற்றப்பத்திரிகையில் அதானி பெயரே இல்லை   முன்னாள் அட்டர்னி ஜெனரல் விளக்கம்   சிறப்பு தொகுப்பு

அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அதானி குழுமம் மீதான குற்றப் பத்திரிக்கையில் கௌதம் அதானியின் பெயரோ, சாகர் அதானியின் பெயரோ குறிப்பிடப் படவில்லை என்று முன்னாள் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி, தெளிவுபடுத்தி உள்ளார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் சூரிய ஒளி மின் விநியோக ஒப்பந்தங்களைப் பெற அதானி குழும தலைவர் கௌதம் அதானி லஞ்சம் கொடுத்ததாக அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது. இதற்காக அமெரிக்க வங்கிகள் மற்றும் முதலீட்டாளர்களிடமிருந்து நிதி திரட்டிய போது இந்த உண்மை மறைக்கப்பட்டதாக அமெரிக்க வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

முறைகேடாகப் பெறப்பட்டதாக கூறப்படும் இந்த ஒப்பந்தத்தை முன்வைத்து, கடன் மற்றும் பத்திரங்கள் மூலம், அமெரிக்கா நிறுவனங்களிடம் இருந்து சுமார் 25 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை அதானி குழுமம் திரட்டியதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

அதானியின் இந்தச் செயல் வெளிநாட்டு முதலீட்டு சட்டப்படி தவறானது எனக்கூறி நியூயார்க்கில் உள்ள ஃபெடரல் நீதிமன்றத்தில் அதானி மற்றும் சாகர் அதானி உட்பட 7 பேருக்கு எதிராக சிவில் மற்றும் குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

இதே புகாரின் பேரில்,அமெரிக்க பங்கு பரிவர்த்தனை ஆணையமும் கவுதம் அதானி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த குற்றச்சாட்டுக்களை அதானி குழுமம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

மேலும் சட்டப் பூர்வமாகவே இந்த வழக்கை எதிர் கொள்ளப்போவதாகவும் தெரிவித்துள்ளது. என்றாலும், இந்த வழக்கு காரணமாக அதானி குழுமத்தின் நிதி திரட்டும் திறன் மற்றும் ஒட்டுமொத்த நிதி நிலைமை பாதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

இந்த சூழலில், கடன் வாங்குபவர்களின் கடன் தகுதியை மதிப்பிடும் ஒரு அமைப்பான மூடிஸ் நிறுவனம் அதானி குழுமத்தின் அதானி கிரீன் எனர்ஜி, அதானி டிரான்ஸ்மிஷன், அதானி எலக்ட்ரிசிட்டி, அதானி போர்ட்ஸ் அண்ட் ஸ்பெஷல் எகனாமிக் ஜோன் லிமிடெட் மற்றும் அதானி இன்டர்நேஷனல் கண்டெய்னர் டெர்மினல் ஆகிய ஏழு நிறுவனங்களின் மதிப்பீட்டை 'Stable' நிலையில் இருந்து 'Negative' ஆக மாற்றியுள்ளது.

இந்த ரேட்டிங் காரணமாக அதானி குழுமத்துக்குப் பன்னாட்டு முதலீடுகள் வருவது குறையும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யங் இந்திய ஸ்கில்ஸ் பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்காக தெலுங்கானா மாநில அரசுக்கு 100 கோடி ரூபாய் நிதியை அதானி குழுமம் அளித்திருந்தது. ஆனால், அமெரிக்காவில் எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு பின்னர், தெலங்கானா அரசு அந்த நன்கொடையை திருப்பி அளித்துள்ளது.

இந்நிலையில், மூத்த வழக்கறிஞரும், முன்னாள் அட்டர்னி ஜெனரலுமான முகுல் ரோஹத்கி, அமெரிக்க வெளிநாட்டு ஊழல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் லஞ்சம் அல்லது நீதியைத் தடுத்தல் தொடர்பான குற்றச்சாட்டுகளில் கௌதம் அதானியோ அல்லது சாகர் அதானியோ பெயரோ சேர்க்கப்படவில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

மேலும், யாருக்கு , எப்படி, எந்தத் துறையிலிருந்து எந்த வகையில் யார் மூலமாக லஞ்சம்கொடுக்கப் பட்டது என்ற விவரங்கள் எதுவும் அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்ட குற்றப் பத்திரிக்கையில் விவரிக்கவில்லை என்று முகுல் ரோஹத்கி கூறியுள்ளார்.

இதனிடையே  அதானி கிரீன் எனர்ஜிநிறுவனம், செபி விதிமுறைகளின் கீழ் பங்குச் சந்தைகளுக்கு அதிகாரப்பூர்வ பதிலைத் தாக்கல் செய்துள்ளது. இதில், அமெரிக்க வெளிநாட்டு ஊழல் நடைமுறைச் சட்ட மீறல்களுக்காக அதானிகள் மீது குற்றம் சாட்டப்பட்டதாகக் கூறப்படுவது உட்பட, பல ஊடக அறிக்கைகளில் வெளிவந்துள்ள தவறுகளை அதானி நிறுவனம் சுட்டி காட்டியுள்ளது.

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, அதானி குழுமத்திற்கு எதிரான அமெரிக்க நீதித்துறையின் குற்றச்சாட்டுகள் கைவிடப்படலாம்என்றும் எதிர்பார்க்க படுகிறது.

Advertisement
Tags :
Advertisement