வங்கக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி - சென்னையில் மிதமான மழை!
09:36 AM Jan 19, 2025 IST
|
Sivasubramanian P
சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
Advertisement
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய பரவலாக மழை பெய்தது. சென்னை சென்ட்ரல், எழும்பூர், வேப்பேரி, அமைந்தகரை, நுங்கம்பாக்கம், சேத்துப்பட்டு, நங்கநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்தது.
Advertisement
இதேபோல் மயிலாடுதுறை, குத்தாலம், கோமல், மங்’கைநல்லூர் திருக்கடையூர், தரங்கம்பாடி செம்பனார்கோவில், ஆக்கூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை 1 மணி நேரத்திற்கு மேலாக பெய்தது. தொடர்ந்து விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது
Advertisement
Next Article