வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதல் - இந்திய உயரதிகாரிகள் கடிதம்!
வங்கதேசத்தில் நிகழும் வன்முறை சம்பவங்களை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி இந்தியாவை சேர்ந்த உயர் அதிகாரிகள் 650-க்கும் மேற்பட்டோர் வங்கதேச மக்களுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
19 ஓய்வுபெற்ற நீதிபதிகள், 300 துணை வேந்தர்கள் உள்பட பல உயர் அதிகாரிகள் கையெழுத்திட்டுள்ள இந்த கடிதத்தில் வங்கதேச மக்கள் அமைதியின் வழி செல்ல வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர். வங்கதேச கலவரம், இந்திய மக்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், இதனால் இந்திய எல்லைப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஆகவே, இந்தியாவுடன் நட்புறவு மற்றும் அமைதியான போக்கை வங்கதேசம் கையாள வேண்டுமென கடிதத்தில் அவர்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர். வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதலை ஒருபோதும் இந்தியா சகிக்காது என கடிதம் மூலம் கூறியுள்ள அவர்கள், சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலே இந்த வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் எனவும் உறுதிபடத் தெரிவித்துள்ளனர்.