வங்கதேச பல்கலைக்கழகத்தில் இந்திய தேசிய கொடி அவமதிப்பு!
வங்கதேச பல்கலைக்கழகத்தில் இந்திய தேசிய கொடி அவமதிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வங்கதேசத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதிலிருந்து அங்கு வசிக்கும் இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையின மக்கள் குறிவைத்து தாக்கப்படுகின்றனர். மேலும், இந்துக்களின் உரிமைக்காக குரல் எழுப்பிய இஸ்கான் தலைவர் சின்மோய் கிருஷ்ண தாஸ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த சூழலில், டாக்காவில் அமைந்துள்ள வங்கதேச பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், டாக்கா பல்கலைக்கழகம், நோகாளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஆகியவற்றின் நுழைவுவாயிலில், இந்திய தேசிய கொடி வரையப்பட்டு அதன் மீது மாணவர்கள் நடந்து செல்லும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி சரச்சையை ஏற்படுத்தியுள்ளன.
இதனால் இணையத்தில் வெகுண்டெழுந்த இந்தியர்கள், இந்திய கல்வி நிறுவனங்களில் பயிலும் வங்கதேச மாணவர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டுமென வலியுறுத்தி உள்ளனர்.