For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

வங்கி சட்டங்கள் திருத்த மசோதா நிறைவேற்றம்!

01:33 PM Dec 04, 2024 IST | Murugesan M
வங்கி சட்டங்கள் திருத்த மசோதா நிறைவேற்றம்

வங்கி சட்டங்கள் திருத்த மசோதா இத்துறையின் நிர்வாகத்தை வலுப்படுத்துவதுடன், வாடிக்கையாளர் வசதியை மேம்படுத்தும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்த வங்கி சட்டங்கள் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

Advertisement

இதில் ரிசர்வ் வங்கி சட்டம் 1934, வங்கி ஒழுங்குமுறை சட்டம் 1949, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா சட்டம் 1955, வங்கி நிறுவனங்கள் பங்கீடுகளை கையகப்படுத்துதல் மற்றும் மாற்றுதல் சட்டம் உள்ளிட்டவற்றில் 19 திருத்தங்கள் முன்மொழியப்பட்டன.

வங்கிக் கணக்கு வைத்துள்ளோர், நான்கு பேர் வரை நாமினிகளாக அறிவிக்க இந்த மசோதா இடமளிக்கிறது. ஐ.இ.பி.எப்., எனப்படும் முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதியத்திற்கு உரிமை கோரப்படாத ஈவுத்தொகைகள், பங்குகள் மற்றும் வட்டி அல்லது பத்திரங்களை மீட்டெடுப்பதற்கும் இந்த மசோதா வழிசெய்கிறது.

Advertisement

தனிநபர்கள் நிதியிலிருந்து பரிமாற்றங்கள் அல்லது பணத்தை திரும்பப் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளதால் முதலீட்டாளர்களின் நலன்கள் பாதுகாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Tags :
Advertisement