வங்க தேசத்தில் சிறுபான்மையினர் உரிமைகள் தொடர்பான பிரச்னைகளை களைய வேண்டும் - இந்து இயக்கங்கள் வலியுறுத்தல்!
வங்க தேசத்தில் மத நல்லிணக்கம் மற்றும் சிறுபான்மையினர் உரிமைகள் தொடர்பான பிரச்னைகளை களைய வேண்டும் என, இந்து இயக்கங்கள் வலியுறுத்தியுள்ளன.
இதுதொடர்பாக பல்வேறு இந்து இயக்கங்கள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்து அமைப்பின் தலைவரான சின்மோய் கிருஷ்ணதாசை வங்கதேச போலீசார் கைது செய்திருப்பது கவலையளிப்பதாக தெரிவித்துள்ளனர்.
கோயில்கள் தாக்கப்படுவதற்கு எதிராக குரல் கொடுத்த அவர் மீது தேசத் துரோக குற்றம் சுமத்தப்பட்டிருப்பது பழிவாங்கும் செயலாகவே தெரிவதாகவும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சின்மோய் கிருஷ்ணதாஸ் நியாயமான முறையில் பாதுகாப்பாக நடத்தப்படுவதை அந்நாட்டு அரசு உறுதி செய்ய வேண்டும் என இந்து இயக்கங்கள் வலியுறுத்தியுள்ள நிலையில்,
வங்க தேசத்தில் மத நல்லிணக்கம் மற்றும் சிறுபான்மையினர் உரிமைகள் தொடர்பான பிரச்னைகளை, களைய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர். வங்கதேசத்தில் உள்ள இந்து சமுதாயத்துடன் தாங்கள் துணை நிற்பதாகவும், நீதி, சமத்துவம் மற்றும் எல்லாருக்குமான சுதந்திரம் ஆகியவற்றுக்காக, குரல் கொடுக்க உறுதி ஏற்பதாகவும் தெரிவித்துள்ளனர்.