வடகிழக்குப் பருவமழை தமிழ்நாட்டில் 33% அளவு அதிகமாக பொழிந்துள்ளது! : பாலச்சந்திரன்
05:04 PM Dec 31, 2024 IST | Murugesan M
வடகிழக்குப் பருவமழை தமிழ்நாட்டில் 33 சதவீதம் அதிகம் பொழிந்துள்ளதாக தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழ்நாட்டின் 8 மாவட்டங்களில் இயல்பான அளவில் பருவமழை பெய்துள்ளதாக தெரிவித்தார்.
Advertisement
தமிழ்நாட்டின் 6 மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை இயல்பை விட குறைவாக பதிவாகி உள்ளது என்றும், அக்டோபர், டிசம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழை அதிகளவு பொழிந்துள்ளதாகவும் பாலச்சந்திரன் தெரிவித்தார்.
மேலும்,தமிழ்நாட்டில் 2 நாட்கள் அதிகாலை நேரத்தில் கடும் பனி மூட்டம் நிலவக்கூடும் என்றும் அவர் கூறினார்.
Advertisement
Advertisement