வட தமிழக கடற்கரையை நெருங்கும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி - தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு!
தென்மேற்கு மற்றும் அதையொட்டிய மேற்கு மத்திய வங்கக் கடலில் நீடிக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடதமிழக கடற்கரையை இன்று நெருங்கும் என வானிலை மையம் கணித்துள்ளது.
தமிழக கடற்கரையை நோக்கி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி திரும்பும் என அறிவிக்கப்பட்ட நிலையில், வட தமிழக கடற்கரையை நோக்கி இன்று நெருங்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய ஏழு துறைமுகங்களில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
மேலும், தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ள வானிலை மையம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரியில் வரும் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது.