வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க விதிமுறைகளில் இடமில்லை - மத்திய அரசு
07:45 PM Nov 15, 2024 IST | Murugesan M
கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவை தேசியப் பேரிடராக அறிவிக்க இயலாது என அம்மாநில அரசிடம் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக கடந்த நவம்பர் 10-ம் தேதி மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் எழுதிய கடிதம் தற்போது வெளியாகியுள்ளது.
Advertisement
அதில், நாட்டில் எந்தவொரு பேரிடரையும் தேசியப் பேரிடராக அறிவிக்க தற்போதுள்ள மாநில பேரிடர் மேலாண்மை நிதி மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை நிதியின் விதிமுறைகளில் இடமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் மாநில அரசின் முயற்சிகளுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு தொடர்ந்து வழங்கும் எனவும் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement