வயநாட்டில் காங். தலைவர்கள் படங்கள் பதித்த உணவு பெட்டிகள் பறிமுதல் - தேர்தல் பறக்கும் படை நடவடிக்கை!
02:20 PM Nov 08, 2024 IST | Murugesan M
கேரள மாநிலம் வயநாட்டில் வாக்காளர்களுக்கு வினியோகம் செய்யப்படவிருந்த காங்கிரஸ் தலைவர்களின் படங்கள் பதித்த உணவு பெட்டிகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
நவம்பர் 13-ம் தேதி நடைபெற உள்ள வயநாடு இடைத்தேர்தலில் சிபிஐ மூத்த தலைவர் சத்யன் மொகேரி மற்றும் பாஜகவின் நவ்யா ஹரிதாஸ் ஆகியோரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார்.
Advertisement
இதற்காக வயநாட்டில் முகாமிட்டுள்ள பிரியங்கா காந்தி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரின் படங்கள் பதித்த உணவு பெட்டிகளை, தோள்பட்டி பகுதியில் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
.
Advertisement
Advertisement