வரி உயர்வுக்கு எதிர்ப்பு - ஈரோடு அருகே நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கடையடைப்பு போராட்டம்!
05:07 PM Dec 07, 2024 IST | Murugesan M
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
சொத்து வரி மற்றும் குப்பை வரி உள்ளிட்ட பல்வேறு வரிகள் உயர்த்தப்பட்டதை கண்டித்து, ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து வணிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, பல்வேறு கட்சிகள் சார்பில் உண்ணாவிரம் இருக்க முயன்றவர்களை போலீசார் கைது செய்தனர்.
Advertisement
குறிப்பாக, அதிமுக நகர செயலாளர் மூர்த்தி என்பவரை போலீசார் வலுக்கட்டாயமாக வாகனத்தில் ஏற்றியதால், போலீசார் மற்றும் போராட்டக் குழுவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
Advertisement
Advertisement