வருமான வரி தாக்கல் செய்ய காலக்கெடு நீட்டிப்பு!
வருமான வரிக் கணக்கை அபராதத்துடன் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் ஜனவரி 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
Advertisement
2023 - 24 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கை கடந்த ஜூலை 31-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய நேரடி வரி வாரியம் அறிவித்திருந்தது.
இந்த காலகட்டத்திற்குள் தாக்கல் செய்யவில்லை எனில், அபராதத்துடன் வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்வதற்கு டிசம்பர் 31-ம் தேதியான இன்றே கடைசி நாள் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆண்டு வருமானம் 5 லட்சம் ரூபாய்க்குள் இருந்தால் ஆயிரம் ரூபாயும் 5 லட்சத்திற்கு மேல் இருந்தால் 5 ஆயிரம் ரூபாயும் அபராதமாக விதிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், வருமான வரித் தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்குமாறு மத்திய நேரடி வரிகள் வாரியத்திற்கு மும்பை நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, 2023-2024 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் ஜனவரி 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.