வரும் 27-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வர உள்ளதாக தகவல்!
05:17 PM Dec 24, 2024 IST | Murugesan M
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வரும் 27-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. .
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, டெல்லியிலிருந்து வரும் 27-ம் தேதி தமிழகம் வருகிறார். தொடர்ந்து 28-ம் தேதி சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவண்ணாமலை செல்லும் அமித்ஷா, மாவட்ட பாஜக அலுவலகத்தை திறந்து வைக்கிறார். பின்னர் அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்யும் அவர், அன்றைய தினமே மீண்டும் டெல்லி புறப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Advertisement
Advertisement