For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

வரும் 30-ம் தேதி விண்ணில் ஏவப்படும் பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் - இஸ்ரோ தகவல்!

10:44 AM Dec 22, 2024 IST | Murugesan M
வரும் 30 ம் தேதி விண்ணில் ஏவப்படும் பி எஸ் எல் வி  சி 60 ராக்கெட்   இஸ்ரோ தகவல்

பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட்டை வரும் 30-ம் தேதி விண்ணில் ஏவ உள்ளதாக, இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோ தீவிரமாக பணியாற்றி வருகிறது. அதன்படி வருகிற 2035-ம் ஆண்டுக்குள் விண்வெளியில் இந்திய ஆய்வு மையத்தையும் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது.

Advertisement

இதற்கான முன் தயாரிப்பு திட்டமாக ஸ்பேஸ்-எக்ஸ் எனும் திட்டம் தற்போது செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தில் ஸ்பேஸ் டாக்கிங் எனப்படும் விண்வெளியில் விண்கலன்களை ஒருங்கிணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது.

இந்த நிலையில், பி.எஸ்.எல்.வி.- சி-60 ராக்கெட்டை வரும் 30-ம் தேதி விண்ணில் ஏவ முடிவு செய்யப்பட்டு உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்த ராக்கெட்டுடன் எஸ்.டி.எக்ஸ்-01 மற்றும் எஸ்.டி.எக்ஸ்-02 என்ற செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படுகிறது.

Advertisement

இவை ஒவ்வொன்றும் தலா 220 கிலோ எடை கொண்டதாகும். பூமியில் இருந்து 470 கிலோ மீட்டர் உயரத்தில் உள்ள வெவ்வேறு சுற்றுப்பாதையில் இவை நிலை நிறுத்தப்படுகின்றன.

Advertisement
Tags :
Advertisement