வருவாய்த்துறையினரின் நோட்டீஸால் தச்சு தொழிலாளி தற்கொலை!
சென்னை திருவேற்காட்டில் வீட்டை காலி செய்ய வலியுறுத்தி வருவாய்த்துறை நோட்டீஸ் ஒட்டியதால் தச்சு தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார்.
Advertisement
திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட கோலடி ஏரியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 27 வீடுகளை வருவாய்த்துறையினர் கடந்த மாதம் இடித்து அகற்றினர். மேலும் அங்கு ஆக்கிரமிப்பில் இருந்த ஆயிரத்து 263 கட்டடங்கள் மற்றும் வீடுகளில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது.
அப்போது செல்லியம்மன் நகரில் வசித்துவந்த தச்சு தொழிலாளியான சங்கர் என்பவரது வீட்டிலும் வருவாய்த்துறையினர் நோட்டீஸ் ஒட்டினர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
உயிரிழந்த சங்கரின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் 300-க்கும் மேற்பட்டோர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் திருவேற்காடு - அம்பத்தூர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அங்கு 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.