வருவாய்த்துறையினரின் போராட்டத்தால் பாதிப்படைந்த பொதுமக்கள்!
02:28 PM Nov 26, 2024 IST | Murugesan M
சேலத்தில் வருவாய்த்துறையினர் பணியை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் ஆட்சியர் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வருவாய்த்துறையினர் பணியை புறக்கணித்து இன்று முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்திருந்தனர்.
Advertisement
அந்த வகையில் சேலம் மாவட்டம் முழுவதும் பணி புரியும் வருவாய்த்துறையினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட 11 தாலுகா அலுவலகங்களும் வெறிச்சோடி காணப்பட்டன. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.
Advertisement
Advertisement