வலுவடைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி - 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
02:00 PM Dec 10, 2024 IST | Murugesan M
வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்தது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக, இலங்கை கடற்கரையை நோக்கி நகரும் என அறிவித்துள்ளது.
Advertisement
மேலும், நாகை, திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், நாளை கடலூர், மயிலாடுதுறை, நாகை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளது.
மேலும், நாளை மறுநாள் திருச்சி, பெரம்பலூர், கரூர் மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
Advertisement
Advertisement