வளி மண்டல மேலடுக்கு சுழற்சி - தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை!
வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்தது.
Advertisement
வட கிழக்கு இந்திய பெருங்கடல், அதனை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல், ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதன் காரனமாக தமிழகத்தின் அனேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இந்நிலையில், நீலகிரி மாவட்டம், உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மதியதிற்கு மேல் விட்டு விட்டு மழை பெய்த நிலையில், மாலை முதல் இரவு வரை கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவர்களும், அலுவலகங்களில் இருந்து வீடு திரும்பியோரும் கடும் இன்னலுக்கு உள்ளாகினர். அதேநேரம், இந்த மழை மலைத்தோட்ட விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல, சிவகங்கை மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று நாள் முழுவதும் பெய்த கனமழையால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டனர். தொடர் மழை காரணமாக பெரும்பாலான இடங்கள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன.