வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் - புதிய வாக்காளர்கள் ஆர்வம்!
திருச்சியில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்கை சிறப்பு முகாமில், தங்களின் பெயரை சேர்க்க 18 வயது நிரம்பியவர்கள் அதிகளவில் ஆர்வம் காட்டினர்.
சிறப்பு வாக்காளர் அடையாள அட்டை திருத்தம் முகாமின் ஒரு பகுதியாக வாக்காளர்கள் தங்கள் பெயரைச் சேர்ப்பதற்கும், வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கும் வசதியாக இந்தியத் தேர்தல் ஆணையத்தால் வாக்குச்சாவடி அமைவிடங்களில் சிறப்பு முகாம்கள் அறிவிக்கப்பட்டன.
அதன்படி வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக திருச்சி மாவட்டத்தின் 9 சட்டமன்ற தொகுதிகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.
இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களின் பெயர், முகவரி உள்ளிட்ட திருத்தங்களுக்காக விண்ணப்பங்களை வழங்கினர். மேலும் இன்றே கடைசி நாள் என்பதால் 18 வயது பூர்த்தியடைந்தவர்களும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வழங்கினர்.
நெல்லையில் நடைபெற்ற முகாமிற்கு பொதுமக்கள், அதிகம் வராததால் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் முகாமில் பணியாற்றக்கூடிய அங்கன் வாடி ஊழியர்கள் தங்களுக்கு போதிய ஊதியம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.